Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 15 செப்டம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் இதயா மகளிர் இன்ஜினியரிங் கல்லூரியில் உள்ளது. இந்த கல்லூரியில் வாணபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மதிக்தகுந்த மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதற்காக அவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.
அவருடன் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவி வாணராபுரம் பகுதியைச் சேர்ந்த பி டெக் முதலாம் ஆண்டு மற்றும் சிஎஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவிகள் கடலூர் பகுதியைச் சேர்ந்த பி டெக் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி என நான்கு மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருவதாகவும் இந்த நிலையில்,
வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி அவருடன் தங்கி இருந்த தோழிகளான நான்கு பேரும் அந்த மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளனர்.
மேலும் துடைப்பத்தால் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதனால் மாணவியை சகதோழிகள் துன்புறுத்தலை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அதன் பேரில் சக மாணவிகள் நான்கு பேரும் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN