Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் தவெக பொறுக்கிகளால் காக்கியில் இருக்கும் பெண் போலீசுக்கே பாதுகாப்பில்லை என்று திமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில்,
சமூக வலைதளங்களில் தங்களைக் கேள்வி கேட்கும் பெண்களை ஆபாசமாகத் திட்டித் தீர்க்கும் தவெக 'கீபோர்டு' பொறுப்பிகள், இப்போது அதிகாரம் கைக்கு வந்ததும் சீருடையில் இருக்கும் பெண் காவலர்களிடமே அத்துமீறத் தொடங்கிவிட்டார்கள்!
சென்னை அயனாவரத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய தவெக நிர்வாகியைப் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், பொதுமக்களிடம் சிக்கியவரைக் காப்பாற்றும் வகையில், தவெக எம்.எல்.ஏ ராம்குமார் காவல் நிலையத்திற்கே நேரில் சென்று அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
தன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி பெண் காவலரிடம் அத்துமீறினால், தவெக எம்.எல்.ஏ அவனைக் காவல் நிலையத்துக்கே சென்று ரவுடியைப் போல் மீட்டு வருவார். ஆனால் இதையெல்லாம் தட்டிக் கேட்க வக்கற்ற அந்த 'டம்மி' முதலமைச்சரோ, சட்டமன்றத்தில் தவெகவினர் யாரும் காவல் நிலையத்தில் தலையிடுவதில்லை எனப் பொய் பேசுவார்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கும், பெண்கள் பாதுகாப்பும் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்க, நாட்டை ஆளத் துப்பில்லாத இந்த டம்மி முதலமைச்சரோ இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமின்றி, லண்டனில் சொகுசாக கார் ரேஸ் பார்த்து ரீல்ஸ் எடுப்பதில் பிஸியாக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN