தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு - தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைப்பு
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச) பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன
DMK leader Stalin suffers sudden health setback


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச)

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று நடைபெறவிருந்த முப்பெரும் விழா மற்றும் மாலை நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,

கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தலைவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருவதாகவும், அவர் பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழா நடைபெறும் மாற்றுத் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் துரைமுருகன் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b