சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க முப்பெரும் விழா
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா இன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெறுகிறது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்ப
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக முப்பெரும் விழா


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா இன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெறுகிறது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினங்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் இந்த முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழா கலைஞர் அரங்கில், கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆண்டுதோறும் வழங்கப்படும் கழக விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பட்டியலை ஏற்கனவே திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி, கழக விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கு பெரியார் விருதும், சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷுக்கு அண்ணா விருதும் வழங்கப்படுகிறது.

அதேபோல், கலைஞர் விருது மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுக்கும், பாவேந்தர் விருது கழகத்தின் மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமுவுக்கும் வழங்கப்பட உள்ளது.

பேராசிரியர் விருது மிசா எஸ்.அகமது என்கிற தம்பி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், கழக இளைஞரணியின் துணைச் செயலாளர் இளையராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் விருதும், மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான பா.திருமாவேலன் அவர்களுக்கு முரசொலி செல்வம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களின் பெயரில் வழங்கப்படும் இந்த விருதுகள், கழகத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளன.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது பெறுவோருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b