தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை சைதாப்பேட்டையில் கடந்த 12-ஆம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அமைச்சர் நிர்ம
ஆ.ராசா


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை சைதாப்பேட்டையில் கடந்த 12-ஆம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்து ஆ.ராசா பேசியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அமைச்சர் நிர்மல் குமாரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பொதுவெளியில் பேசியதாக கூறி, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் கார்த்தி என்பவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீது சைதாப்பேட்டை போலீசார் தற்போது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி ஏற்கனவே ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam