அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.) கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தேர்தல் முறைகேடு நடந்ததாகவும், செங்கோட்டையன் தனது வேட்புமனுவில் சான்றொப்பம் வாங்கிய வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றதே தவறு அதனால் செங்கோட்டையனின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தன் மீதான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று(செப். 15) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவத்தார். இன்று, இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பின் மூலம் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b