தங்கம் விலை சரிந்ததால் நகை பிரியர்கள் உற்சாகம்
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.) செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று செப்டம்பர் 14ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 14,125 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ர
தங்கம்


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில், நேற்று செப்டம்பர் 14ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 14,125 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 1,13,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,040க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P