Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 15 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் போக்குவரத்துத் துறை இணை இயக்குநர் சுரேஷ், ஒசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி ஆகியோர் தலைமையில், ஒசூரின் பல்வேறு பகுதிகளில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின்போது பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்த பேருந்துகள் மற்றும் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இயக்கப்பட்ட பேருந்துகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து விதிமீறலில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற சோதனையில் சுமார் ரூ.10 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் தொடர்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam