Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 15 செப்டம்பர் (ஹி.ச.)
2026-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இஷான் கிஷன் 42 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் 2026-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 82 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நடைபெற்ற துலீப் கோப்பை இறுதிப்போட்டியிலும் அவர் 270 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA