மனிதகுல அமைதியே முக்கியம் - துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்
புதுடெல்லி , 15 செப்டம்பர் (ஹி.ச.) டெல்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவுன்சிலின் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதா
A


புதுடெல்லி , 15 செப்டம்பர் (ஹி.ச.)

டெல்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கவுன்சிலின் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலகம் தற்போது பல்வேறு மோதல்கள் மற்றும் முரண்பாடுகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையிலும் அவற்றை கடந்து பிரிக்ஸ் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒரு நாட்டின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், மனிதகுலத்தின் அமைதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த கொள்கையின் அடிப்படையில் செயல்பட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்துக்கான உலகளாவிய குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது.

உலக அமைதியை நிலைநாட்டுவதிலும், வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் இந்தியா தொடர்ந்து முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA