Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 15 செப்டம்பர் (ஹி.ச.)
பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
முன்னதாக பேரணியாக நடந்து சென்று அண்ணாவின் புகழ் ஓங்குக என்ற முழக்கங்களோடு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாள் என்பது அவரது வரலாறு புகழை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பது என்பதால் இன்று தமிழ்நாடு முழுவதும் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அவருடைய கருத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் எடுத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.
திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் குறித்து அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிகழ்வை நடத்த சொல்லியுள்ளார்.
அண்ணா சாதாரணமானவர் அல்ல, இந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அவர்தான். தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு ஏற்பாடு செய்தவர்,.
அவரது வழியில் வந்த கலைஞரின் ஆட்சியில் தான் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றது அதற்கு வழி காட்டியவர் அண்ணா என்றார்.
பெரியாரின் காலத்தில் இருந்தே அண்ணாவும் கலைஞரும் அவரோடு கொள்கை பிடிப்போடு இருந்தவர்கள்.
இந்த பிறந்தநாள் என்பது ஏதோ வீட்டில் கொண்டாடும் கொண்டாட்டம் அல்ல, அதுபோல ஒரு சடங்கு சம்பிரதாயமும் அல்ல.
அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று சொன்னால் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு அவரது வரலாற்றை எடுத்துச் சொல்கிறோம்.
அவர்களையும் தமிழ் உணர்வோடும் திராவிட உணர்வோடும் அண்ணாவைப் போல் கலைஞரைப் போல் தளபதியைப் போல் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த பிறந்த நாளில் அவருக்கு விழா எடுப்பதற்கான நோக்கம் என்றார்.
நிகழ்வின் போது, அவருடன் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பொன் கௌதம சிகாமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN