கர்நாடகாவில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
பெங்களூரு , 15 செப்டம்பர் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள சவத் காலி பகுதியில் ஒரு வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரிட்ஜ் வெடித்ததை தொடர்ந்து வீட்டில் தீப்பிடித்து, சிறிது நேரத்தில் வீடு முழ
A


பெங்களூரு , 15 செப்டம்பர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள சவத் காலி பகுதியில் ஒரு வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பிரிட்ஜ் வெடித்ததை தொடர்ந்து வீட்டில் தீப்பிடித்து, சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவியது. இதனால் வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து பிரிட்ஜ் வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA