Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 15 செப்டம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் கிராமத்தில் 2 பேரை கொன்ற புலியை தேடிப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் 25-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புலியை தேடும் பணிக்காக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதுமலை யானைகள் முகாமில் இருந்து பொம்மன், உதயன் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. 20 நாட்களுக்கும் மேலாக இந்த கும்கி யானைகள் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், பொம்மன், உதயன் ஆகிய 2 கும்கி யானைகளும் ஓய்வுக்காக இன்று முதுமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, புலியை தேடும் பணிக்காக முதுமலை யானைகள் முகாமில் இருந்து சீனிவாசன், கிரி ஆகிய 2 கும்கி யானைகள் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளன.
புதியதாக வரவழைக்கப்பட்டுள்ள சீனிவாசன், கிரி ஆகிய கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் புலியை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P