த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை மீண்டும் விளக்கம்
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.) நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்
Bullet in


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்தார்.

2006- ஆம் ஆண்டு திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சென்றார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த அவருக்கு கடந்த செப்.09- ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதேபோல், தவெக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

செப்.10- ஆம் தேதி மாலை 05.15 மணிக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை மீண்டும் விளக்கம் அளித்திருக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN