Enter your Email Address to subscribe to our newsletters

இம்பால் , 15 செப்டம்பர் (ஹி.ச.)
மணிப்பூரில் மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தலைதூக்க தொடங்கி இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமன்லாங், நோனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த நாகா ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு குகி-சோ கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் இந்த ஆண்டு முழுவதும் நாகா ஆயுதக்குழுக்கள் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அந்த கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், குழந்தைகள், பெண்கள் உள்பட 22 குகி பழங்குடியின மக்கள் இந்த ஆண்டு மட்டும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக குகி-சோ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மணிப்பூரில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயுதக்குழுக்களின் தொடர் செயல்பாடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும், மணிப்பூரை மீண்டும் முழு அளவிலான மோதலை நோக்கி தள்ளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது’’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA