Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 15 செப்டம்பர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோவில் யானை செங்கமலத்திற்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் யானை செங்கமலம், தனது குறும்புத்தனம் மற்றும் குழந்தையைப் போன்ற நெற்றி தலைமுடியால் பக்தர்கள் மத்தியில் பிரபலமானது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகப் பெருமானின் அம்சமாக கருதப்படும் யானை செங்கமலத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு யானையை விநாயகரின் உருவமாக கருதி வழிபட்டனர். பூஜையைத் தொடர்ந்து யானைக்கு மிகப்பெரிய சோற்றுக் கவளம், பிரம்மாண்டமான கொழுக்கட்டை, வெல்லம், கரும்பு மற்றும் பல்வேறு வகையான பழங்கள் வழங்கப்பட்டன.
யானை செங்கமலம் பக்தர்கள் வழங்கிய உணவுப் பொருட்களை ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தது. இதனை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருடா இளவரசன், நிர்வாக அலுவலர் மாதவன், யானைப்பாகன் ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam