எந்தத் திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு, 15 செப்டம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகத் தேர்தல் களத்தில் முதலில் 1967, அதற்குப் பிறகு 1977 எ
Minister Sengottaiyan


ஈரோடு, 15 செப்டம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது அவர் பேசுகையில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகத் தேர்தல் களத்தில் முதலில் 1967, அதற்குப் பிறகு 1977 என்று கூறி, 2026-இல் தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டார்கள்.

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேலை நாடுகளுக்குசென்று, 11,000 கோடி அளவுக்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும்; கூடுதலாக இடம்பெற வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்;

அதே நேரத்தில் சட்ட ஒழுங்கு பேணிக் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கக்கூடிய முதலமைச்சராக விஜய் விளங்குகிறார்.

முதலமைச்சரை பொறுத்தவரையில், தூய்மையான ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று சொன்ன ஒரே தலைவர் விஜய் ஆவார்.

அனைத்து மாநிலங்களும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. பிற மாநில மக்கள் கூட, தமிழக விஜய் அவர்களைப் போல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் என்று பேசுகின்றனர்.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து, 14, கூட்டணி ,17 கூட்டணிக் கட்சிகள் உள்ள சூழ்நிலையிலும், தனித்து நின்று வெற்றிபெறக்கூடிய ஒரு இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது.

ஒரு இயக்கத்தில் இருப்பவர்கள் கொள்கை ரீதியாக என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ, அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது; அது அவரவர் விருப்பம். எங்களை பொறுத்தவரையில் தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று;

அதே நேரத்தில், வாக்கு வித்தியாசம் எந்த அளவுக்குப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை வார்த்தைகள் பேசியது குறித்து, அவர் இதே வேலையைத் தான் செய்து வருகிறார்.

ஜெயலலிதா இருக்கும் போதும், அவருக்கு பிறகும் ஆ. ராசா இதுபோன்ற வார்த்தைகளை தான் உச்சரித்து வருகிறார்.

பேரறிஞர் அண்ணாவின் கனவு என்னவென்றால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதுதான்.

தொடர்ந்து மின் நுகர்வு அதிகரித்து வருவது குறித்து, தமிழகத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த 20 நாட்களாக நம்மைவிட கூடுதலாக மின்வெட்டு அங்கு நிலவுகிறது; மின் பற்றாக்குறை உள்ளது.

அதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எங்கெல்லாம் பற்றாக்குறை உள்ளதோ அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத் துணை மின் நிலையங்களை ஆய்வு செய்து வருகிறார்.

சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை பகல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அதை இரவு நேரங்களில் சேமித்து வைப்பதற்கான வழிகளை தேர்வு செய்து வருகிறார். அவை செயல்பாட்டிற்கு வரும்போது, மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்.

வருவாய்துறையில் உள்ள காலி பணியிடங்களில் உதவிப் பணியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் போன்ற பணியிடங்கள் தேவையான அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளன.

உதவி பணியாளர்கள் பணியிடங்கள், திமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் தேர்வு செய்யப்பட்டபோது விதிகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்பட்டதால், அதன்பிறகு தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இரண்டு மாவட்டங்களை தவிர, பிற அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சரோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

சூப்பர் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகரத்தை பொறுத்தவரையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது, சென்னை மாநகரம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

இதற்கு அமைச்சர்கள் தலைமைப் பொறுப்பேற்று, 7 அமைச்சர்கள் கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்டனர். 9 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் அறிந்து செயல்பட்டு வருகிறார்.

மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர்.

வருவாய்த் துறையில் பணியாளர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் மெட்ரிக் முறையில் மாற்றப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும்.

பட்டினப்பாக்கத்தில் சட்டமன்ற அலுவலகம் அமைப்பது போன்ற எந்தத் திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.

அங்கு நான்கு ஏக்கர் நிலம் மட்டும்தான் உள்ளது, அது போதாது என்ற நிலையில், கர்நாடகாவில் இருப்பதைப் போல அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலம் செல்லசெல்ல முதலமைச்சரே அதை பற்றி முடிவு செய்வார்.

வறட்சி காலத்தில் கால்நடைகளுக்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு வேண்டிய பராமரிப்புகளை மேற்கொள்வதற்கும், வைக்கோல் வாங்குவதற்கும், கால்நடை பராமரிப்புத் துறைக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

வறட்சி வரும் காலத்தில் சூழலை ஆராய்ந்து, மனதில்கொண்டு அதற்கான முடிவுகளை எடுக்க 283 கோடி பகிர்ந்து வழங்கப்படும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN