Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத்தின் முதன்மைச் சிற்பியுமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
இதையொட்டி, அண்ணா சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மரியாதை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என். ஆனந்த், ராஜ்மோகன், அருண்ராஜ், டி.கே. பிரபு, வன்னிஅரசு உள்ளிட்டோர் பங்கேற்று, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி தங்களது வணக்கத்தை தெரிவித்தனர்.
தமிழ் மொழி, தமிழ் இன உணர்வு மற்றும் சமூக நீதிக்காக அண்ணா ஆற்றிய அரும் பணிகளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
Hindusthan Samachar / vidya.b