ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு
தமிழ்நாடு, 15 செப்டம்பர் (ஹி.ச.) ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியி
வன்னியரசு


தமிழ்நாடு, 15 செப்டம்பர் (ஹி.ச.)

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில் புதிதாக 11 இளங்கலைப் படிப்புகள், 10 முதுகலைப் படிப்புகள் மற்றும் 2 பட்டயப் படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் விரிவடைவதுடன், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P