Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 16 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனியார் விடுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் ஐஜேகே கட்சியின் மதுராந்தகம் தொகுதி மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஐ ஜே கே பொதுச் செயலாளர் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் அவர்களை சால்வை அணிவித்தும் பூச்செண்டு கொடுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட
ஐ ஜே கே கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்,
மக்கள் வாக்களித்த மை கூட காய்வதற்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தவர் மரகத குமரவேல், இதை பொதுமக்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது கேட்க வேண்டும்.
குதிரை பேரம் என்று சொல்கிறார்கள். 50 கோடியோ, 60 கோடியோ, அதைப் பெற்றுக் கொண்டு பதவியை ராஜினாமா செய்கிறார்.
தேர்தல் என்பது பொது மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து நடைபெறுகிறது. விவசாயிகளோ அல்லது தனியார் ஊழியர்களோ பொதுமக்கள் யாராக இருந்தாலும் அந்த ஒரு நாள் விடுப்பு எடுத்து வாக்களிக்க வருகின்றனர்.
அப்படிப்பட்ட மக்கள் வாக்குகளை துச்சம் என நினைத்தவர் மரகதம் குமரவேல் என்று சாடினார்.
மேலும் 2014 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்று மக்களுக்கு சிறப்பாக பணியாற்றிவேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பக்தவச்சலம், மற்றும் ஏராளமான ஐஜேகே கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN