Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்றும், யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியிடம், இடைத்தேர்தலில் ஆதரவு கோரி தவெக, திமுக, அதிமுக தரப்பில் பாமகவை அணுகியுள்ளனரா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது. இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாமகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அக்கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Hindusthan Samachar / GOKILA arumugam