சுதந்திரப் போராட்ட வீரர் இராமசாமி பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.) சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனது எக்ஸ் தளத்தில், சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும்
Ramaswamy


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனது எக்ஸ் தளத்தில்,

சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

விடுதலைப் போராட்ட வீரரும் சமூகநீதிப் போராளியுமான இராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் மக்கள் பணியாற்றிய மாபெரும் தலைவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பங்களித்த சமூகநீதிப் போராளியுமான ஐயா திரு. இராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்தநாளில் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

அவரது கோரிக்கையை ஏற்று ஏ.என். சட்டநாதன் அவர்கள் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சென்னை கிண்டியில் திருவுருவச் சிலை என இராமசாமி படையாட்சியாரைப் போற்றி வணங்கியது கழக அரசு.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வாதாடிய இராமசாமி படையாட்சியாருக்கு என் புகழ் வணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN