நீர்நிலைகள் பாதுகாப்போம், நீர்வளத்தை பெருக்குவோம் - அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.) நீர்நிலைகள் பாதுகாப்போம்… நீர்வளத்தை பெருக்குவோம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கச்சிராயன்பட்டி கிராமம், மணப்பட்டி கைவாளக
Vishwanathan


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

நீர்நிலைகள் பாதுகாப்போம்… நீர்வளத்தை பெருக்குவோம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கச்சிராயன்பட்டி கிராமம், மணப்பட்டி கைவாளக் கண்மாயை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அவர்கள் மற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் அவர்கள் இணைந்து தொடங்கி வைத்தனர்.

நீர்நிலைகளை பாதுகாத்து, நீர்வளத்தை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடைபெறும் இப்பணிகள், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணும் முக்கியமான முன்னெடுப்பாகும்.

மக்களின் தேவைகளை அறிந்து, இயற்கையையும் நீர்வளத்தையும் பாதுகாக்கும் இதுபோன்ற பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இந்த சிறப்பான முன்னெடுப்பிற்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கிய வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும், ஒருங்கிணைத்து செயல்படுத்திய இயற்கை ஆர்வலர் திரு. நிமல் ராகவன் அவர்களுக்கும், நல்லுசாமி, பிரபாகரன், அருண், பாலன் பாலாஜி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது அன்பான பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீர்நிலைகள் பாதுகாப்போம்…

நீர்வளத்தை பெருக்குவோம்…

விவசாயத்தை வளப்படுத்துவோம்…

மக்கள் நலனில் நாளும் பணியாற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN