Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட எ.வ.வேலு, 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.
வழக்கை விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனக் கூறிய நீதிபதி, அருள் ஆறுமுகம் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.
இதன் மூலம் எ.வ.வேலுவின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தவெக எம்எல்ஏ இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன், கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P