தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு, 16 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் ‘தாய்மாமன் சீர் திட்டம்’ செப்டம்பர் 25-ந்தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான இத்திட்டம், பேரறிஞர
விஜய்


தமிழ்நாடு, 16 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் ‘தாய்மாமன் சீர் திட்டம்’ செப்டம்பர் 25-ந்தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான இத்திட்டம், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக பாரம்பரிய மரபின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

ஜூன் 22, 2026 முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதுடன், ஏழை மற்றும் எளிய குடும்பங்களின் தாய்மையின் மகிழ்ச்சியைக் கௌரவிக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam