Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று செப்டம்பர் 15ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,040க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,065க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,835க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P