Enter your Email Address to subscribe to our newsletters

காந்திநகர் , 16 செப்டம்பர் (ஹி.ச.)
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் வக்ரா பகுதியில் உள்ள தொழிற்பூங்காவில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்குள்ள ரசாயன ஆலையில் இன்று 8 தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தை தொடர்ந்து ஆலையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக ஆலையில் இருந்து வெளியேறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ரசாயன ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA