Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 16 செப்டம்பர் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் பல்லாரி பகுதியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 15.108 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 76.646 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் லேசானதாக இருந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. சேதம் குறித்த தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இருப்பினும், திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பல்லாரி பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாரி பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதியும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ரிக்டர் அளவில் 2.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA