மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மதுரை, 16 செப்டம்பர் (ஹி.ச.) உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் எனப்படும் குடமுழுக்கு விழா நாளை செப்டம்பர் 17-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும்
மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்  மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


மதுரை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் எனப்படும் குடமுழுக்கு விழா நாளை செப்டம்பர் 17-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடமுழுக்கு விழாவையொட்டி மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் செப்.17-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால் பொதுமக்களின் வசதிக்காகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் செப்டம்பர் 26-ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களும், பள்ளி கல்லூரிகளும் வழக்கம் போல் இயங்கும்.

கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோயில் வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b