Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பரிபார மூர்த்தி களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகள் பொற்றாமரை குளம் அம்மன் சன்னதி பிரகாரம் சுவாமி சன்னதி பிரகாரம் ஆகிய இடங்களில் 400-க்கும் மேற்பட்ட பரிவார மூர்த்திகள் உள்ளன.
காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாக திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கு புனித நீர்கள் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருக்கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன், நடராஜர், ராஜராஜேஸ்வரி, துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை எடுத்து நாளை காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
12 கோபுரங்கள், 2 தங்க விமானங்கள் என 14 கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
Hindusthan Samachar / ANANDHAN