Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியில் ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் பிரான்பட்டியில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், வேத பாராயணம் மற்றும் யாகவேள்விகள் நடைபெற்றன.
இன்று காலை இரண்டாம் கால யாகவேள்விகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கும்ப கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் புதிய விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தினர்.
தொடர்ந்து மலைநாச்சி அம்பிகைக்கு மஹாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam