அமைச்சர் பதவிக்காகத்தான் கூட்டணி மாறினீர்கள் – திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.) திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை விமர்சித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியிருந்த நிலையில், அதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். சென்னை
பிரேமலதா விஜயகாந்த்


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை விமர்சித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியிருந்த நிலையில், அதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமாவளவன் மீது தேமுதிகவுக்கு நீண்டகாலமாக மிகப்பெரிய மரியாதை இருப்பதாக தெரிவித்தார். விஜயகாந்த் காலத்தில் இருந்தே இரு தரப்புக்கும் நல்ல உறவு இருந்ததாக பிரேமலதா கூறினார்.

மேலும், விசிக கூட்டணியில் இருந்து விலகியதற்கு அமைச்சர் பதவி கிடைத்ததே காரணம் என்றும் பிரேமலதா குற்றம்சாட்டினார். இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் கூட்டணி மாறியதாக அவர் தெரிவித்தார்.

“கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல வெளியில் இருந்து ஆதரவு அளித்திருக்கலாமே? எதற்காக வேறு கூட்டணிக்குச் சென்றீர்கள்?” என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பினார்.

அதேநேரத்தில், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விவகாரம் குறித்து முடிவு செய்ய வேண்டியது திமுக கூட்டணி தலைமைதான் என்றும், இதில் மற்ற கட்சிகளுக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam