நாமக்கல் அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
நாமக்கல், 16 செப்டம்பர் (ஹி.ச.) நாமக்கல் அருகே நல்லிபாளையம் பைபாஸ் பிரிவு சாலையில் மகிந்திரா தார் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனும
Namakkal


நாமக்கல், 16 செப்டம்பர் (ஹி.ச.)

நாமக்கல் அருகே நல்லிபாளையம் பைபாஸ் பிரிவு சாலையில் மகிந்திரா தார் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்செந்தூரிலிருந்து பெங்களூரை நோக்கி மகிந்திரா தார் வாகனம் சென்று கொண்டிருந்தது. நல்லிபாளையம் பைபாஸ் பிரிவு சாலை அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிர்திசையில் பெங்களூரிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது தார் வாகனம் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள மொலையப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்குமார் (35), அவரது தந்தை செல்வராஜ் (60), தாய் காந்திமதி (55) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பெங்களூரைச் சேர்ந்த கிசான் கவுடா (19) என்பவர் காயமடைந்தார். அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் மற்றும் வாகனங்களின் இயக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN