Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 16 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இராமசாமி படையாட்சியாரை வணங்கி மகிழ்வதாக தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இராமசாமி படையாட்சியார், பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை என்றும் அன்புமணி இராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இராமசாமி படையாட்சியாரின் சமூகப்பணிகளை போற்றும் இந்த நாளில், சமூகநீதியை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து போராடுவதற்கு உறுதியேற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam