Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 16 செப்டம்பர் (ஹி.ச.)
முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் இன்று (செப்டம்பர் 16, 2026) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனைக்கு திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் குறிவைத்து, அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது என்றும், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கே.என்.நேரு சாடியுள்ளார்.
திருச்சியிலுள்ள அன்பில் மகேஷின் இல்லத்திற்கு கே.என்.நேரு நேரில் சென்றபோது, சோதனை நடக்கும் இடத்திற்குள் செல்ல அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தங்களை அச்சுறுத்துவதற்காகவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், இது போன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும், போலீசாரின் இந்த சோதனையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் நாங்கள் நிரபராதி என்பதை நிச்சயம் நிரூபிப்போம் என்றும் கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b