எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்: மாணிக்கம் தாகூர் மரியாதை
தமிழ்நாடு, 16 செப்டம்பர் (ஹி.ச.) சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து வணங்குவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள
இராமசாமி படையாட்சியார்


தமிழ்நாடு, 16 செப்டம்பர் (ஹி.ச.)

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து வணங்குவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூகநீதி, மக்கள் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இராமசாமி படையாட்சியார் குரல் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகநீதிக்கும் அவர் பங்களிப்பு செய்ததாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக இராமசாமி படையாட்சியார் எழுப்பிய குரல், சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகநீதி, சமத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற அவரது கனவுகளை முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam