Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை , 16 செப்டம்பர் (ஹி.ச)
மலையாள கன்னி மாதம் மற்றும் தமிழின் புரட்டாசி மாதங்களுக்கான மாதாந்திர பூஜைகளையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (செப்டம்பர் 16) மாலை திறக்கப்படுகிறது.
சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரியால் திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்படும். இதையடுத்து பக்தர்கள் 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மாதாந்திர பூஜைகள் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறுகின்றன. அன்று இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும்.
சபரிமலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான sabarimalaonline.org.in மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், சபரிமலையில் தங்கும் விடுதிகளுக்கு onlinetdb.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ