Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னையில் சவுக்கு சங்கருடன் இணைந்து தொகுப்பாளராக பணியாற்றி வரும் மாலதியை, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சவுக்கு சங்கருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் மாலதி, தன்னைப் பற்றி நக்கீரன் பிரகாஷ் அவதூறாக பேசியதாகக் கூறி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாலதி அளித்த புகாரைத் தொடர்ந்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்கள் மற்றும் சம்பவம் தொடர்பான விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது நக்கீரன் பிரகாஷை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நக்கீரன் பிரகாஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அவை தொடர்பான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ