முகாந்திரம் இல்லாமல் எந்த சோதனையும் நடைபெறாது - அன்பில் மகேஷ் வீட்டு சோதனை குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி
வாணியம்பாடி, 16 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்ட பின்னர் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் பள்ளிக்கல்வித்துறை
முகாந்திரம் இல்லாமல் எந்த சோதனையும் நடைபெறாது - அன்பில் மகேஷ் வீட்டு சோதனை குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி


வாணியம்பாடி, 16 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்ட பின்னர் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் இன்று காலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வரும் சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டத்தின் ஆட்சியில் முகாந்திரம் இல்லாமல் எந்த சோதனையும் நடைபெறாது என்று தெரிவித்தார். காவல்துறையினருக்கு உரிய ஆதாரங்களும், தகவல்களும் கிடைத்திருந்தால் மட்டுமே இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக பார்க்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், லஞ்ச புகார் தொடர்பான வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே தற்போது திருச்சி மற்றும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டம் தன் கடமையை செய்யும், விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b