Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நீலாம்பூர், செரையம்பாளையம், அம்பேத்கர் நகர் பகுதிகளை இணைக்கும் பேருந்து எண் 39-B சேவை கொரோனா காலத்தில் சேவை நிறுத்தப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நான்கு கி.மீ கடந்து சென்று பேருந்து ஏறும் சூழல் ஏற்பட்டது
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷிடம் அப்பகுதி ஊர்மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவையை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி சந்தோஷ்,
நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் நடிக்கும் போது தன்னிடம் வந்து ஜாதகம் பார்த்ததாகவும் அப்போது விரைவில் உங்களுக்கு ஜாக் பாட் அடிக்கும் என்று விஜய் சேதுபதியிடம் கூறியிருந்தேன்.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சென்ற பிறகு முதல்வர் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதிக்கு கட்டம் சரியில்லை. அதனால் இப்படி பேசி வருகிறார்.
முதல்வர் விஜய் பெயர் வைத்து விமர்சனம் செய்தால் பொதுமக்களே நேரடியாக பதில் அளிப்பார்கள்.
விஜய் சேதுபதி பேசுவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்றது.
இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN