Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 16 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கிய நிலையில், பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஐந்து தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்தார். அப்போது நான்கு மாட வீதிகளிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
சுவாமியின் வீதி உலாவின்போது கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீயர்களின் சீடர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடியபடி ஊர்வலமாக வந்தனர்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்திருந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் வகையில் பல்வேறு வேடங்களை அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதனால் நான்கு மாட வீதிகளிலும் பக்தி மற்றும் ஆன்மிக உற்சாகம் நிறைந்திருந்தது.
Hindusthan Samachar / P YUVARAJ