திருவள்ளூர் கூடப்பாக்கம் ஏடிஎம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது - ரூ.12 லட்சம் பறிமுதல்
திருவள்ளூர் , 16 செப்டம்பர் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 5-ம் தேதி சுமார் 12 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் ஏடிஎம் இயந்திரமே கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம
திருவள்ளூர் கூடப்பாக்கம் ஏடிஎம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது - ரூ.12 லட்சம் பறிமுதல்


திருவள்ளூர் , 16 செப்டம்பர் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 5-ம் தேதி சுமார் 12 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் ஏடிஎம் இயந்திரமே கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் மாவட்ட போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 12 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளைக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா, இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b