தவெகவில் கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
சென்னை, 16 செப்டம்பர் (H.S.) திருப்பூரில் வருவாய் துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் அனைவரும் வேட்பு மனு தாக்கலில் கலந்து கொண்டு இருக்கின்றோம். வேட்பு மனு தாக்
Sengottaiyan


சென்னை, 16 செப்டம்பர் (H.S.)

திருப்பூரில் வருவாய் துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் அனைவரும் வேட்பு மனு தாக்கலில் கலந்து கொண்டு இருக்கின்றோம்.

வேட்பு மனு தாக்கல் இறுதி நாள். வெற்றி வாகை சூட சத்யபாமா போட்டியிடுகின்றார்.

இந்த இயக்கம் திமுக,அதிமுக இணைந்து ஆட்சி என்பதை ஏற்காமல், விஜய் தலைமையில் இணைந்து இருக்கின்றார்.

திமுகவுடன் கூட்டணி வைப்பது சரியில்லை என்பதால் வெளியேறி தவெகவில் இணைந்து போட்டியிடுகின்றார்.

தூய்மையான ஆட்சியை தமிழகத்தில் கொடுத்து வருகின்றார் முதல்வர் விஜய்,

வடக்கில் இருப்பவர்கள் கூட இதே போல ஒரு முதல்வர் இல்லையே வருந்துகின்றனர்.

தளபதியின் வேட்பாளராக விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றார். 4.5 லட்சம் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து விசிலுக்கு வாக்களித்தனர்.

வெற்றி வரலாறு படைக்கும் விதமாக இருக்கும். கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள்.

வெற்றியை முதல்வரிடம் ஒப்படைப்போம் என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN