Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 16 செப்டம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பாசிபட்டணத்தைச் சேர்ந்த மீனவர் செல்லக்குழந்தை (வயது 40) படகில் தனியாக கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றார். வலை கயறு காலிலும், கழுத்திலும் சிக்கியதில் கடலில் தவறி விழுந்து பலியானார்.
அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் சக மீனவர்களுடன் கடலுக்கு சென்ற போது கடலில் 2 நாட்டிகல் தொலைவில் செல்லக்குழந்தை உடல் மிதப்பதை பார்த்தார். உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதே போல் பாசிபட்டினத்தை சேர்ந்த நாகூர்செல்வம் 42. நேற்று காலை 9:00 மணிக்கு தனியாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். படகை நிறுத்துவதற்காக நங்கூரமிட்டபோது கடலுக்குள் தவறி விழுந்து பலியானார். உடல் பாசிபட்டனம் கடற்கரை ஓரம் ஒதுங்கியது.
உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களின் மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b