உலக டென்னிஸ் தரவரிசை: ரைபகினா முதலிடம்
மியாமி , 16 செப்டம்பர் (ஹி.ச.) உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சினெர் 11,500 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஜ
A


மியாமி , 16 செப்டம்பர் (ஹி.ச.)

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சினெர் 11,500 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 9,690 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 5,560 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 9,901 புள்ளிகளுடன் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.

அரைஇறுதியை எட்டியபோதே அவர் முதலிடத்தை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

99 வாரங்களாக முதலிடத்தில் இருந்த பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 7,875 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா (7,265), கோகோ காப் (7,244), ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா (5,743), செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா (5,328) ஆகியோர் முறையே 3 முதல் 6 இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA