கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் - எடப்பாடி பழனிச்சாமி
மதுரை, 17 செப்டம்பர் (ஹி.ச.) முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக்
இபிஎஸ்


மதுரை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் கூறுகையில்:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தனை செய்திருக்கும் நல்ல நேரத்தில் உங்களை சந்திக்கிறேன்.

தமிழக முதல்வர் அண்மையில் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ளார். இன்று தமிழகம் திரும்புவதாக ஊடகத்தில் செய்தி வந்துள்ளது. தொழில் முதலீட்டை ஈற்பதற்காக சென்று உள்ள முதல்வர் தொழில் துறை அமைச்சர் மற்றும் அவரது செயலாளரை அழைத்துச் செல்லவில்லை. அவர்களை அழைத்துச் சென்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்துச் சென்று முதலீடுகளை மேற்கொள்ளாத பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 32 இடங்களில் மதர் சன் நிறுவனம் உள்ளது. சென்னையில் அதற்கு அலுவலகம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அப்படி இருக்கும்போது முதல்வர் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இந்தியாவில் அலுவலகம் இருக்கும்போது அங்கே சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது ஏன். தொழில் முதலீடை ஈர்க்க சென்றுள்ளாரா இன்ப சுற்றுலா சென்றுள்ளாரா என மக்கள் கேட்கும் அளவில் உள்ளது.

மானிய கோரிக்கை விவாதத்தின் போது சொந்த பிரச்சனையை தான் பார்க்க முடிந்தது. மக்கள் பிரச்சனை குறித்து எதுவும் பேசவில்லை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் சட்டமன்ற நிகழ்வு நடைபெற்றது. முதல் மூன்று மணி நேரம் தான் மக்கள் பிரச்சினையை பேசினார்கள். மற்ற ஏழு மணி நேரம் சொந்த பிரச்சனையை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மேல் குற்றசாட்டு வைப்பதும் எதிர்க்கட்சி அதற்கு பதிலடி கொடுப்பதும் இன்று சட்டசபையின் நேரத்தை வீணடித்தனர். ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறவில்லை. மக்கள் எள்ளி நகையாடும் அளவிற்கு சட்டமன்ற நிகழ்வு நடந்துள்ளது. சினிமாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை போல் தான் சட்டமன்றத்தை மக்கள் பார்த்தார்கள்.

தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நடைபெறும் ஆனால் அமைச்சரை கேட்டால் மின்வெட்டு இல்லை என்றார். ஆனால் அவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் திருமாவளவன், கம்யூனிஸ்ட் சண்முகம் கலந்து கொண்ட கூட்டத்தில வருவாய்த்துறை அமைச்சர் பேட்டி கொடுக்கும்போது மின்வெட்டு நடைபெற்றது இதெல்லாம் அதற்கு சாட்சி.

அமைச்சர் மின்வெட்டு இல்லை என்று இன்னும் மறைப்பது அர்த்தமில்லை. அக்கப்பூர்வமான விளக்கம் வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டு மின்சார பற்றாக்குறை இருப்பதாகவும் அதை ஈடு செய்ய 2000 மெகா வாட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்குவதாக குறிப்பிட்டு இருக்கிறார். மின் வெட்டு இல்லை என்றால் எதற்காக வெளி சந்தையில் இருந்து வாங்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது எதார்த்தமான நிலை. இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதும் மக்கள் தூக்கத்தை தொலைத்ததற்கு காரணம் தமிழக அரசு. அரசு இனிமேலாவது விழித்துக் கொண்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்.

இந்த அரசு ஏற்பட்ட பிறகு புதிய அறிவிப்பு வரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். புதிய பெரிய அறிவிப்புகள் எதுவும் வரவில்லை ஒரு சில திட்டங்கள் தான் வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக்கழகம் அறிவித்த அறிவிப்புகளையும் அறிவிக்கவில்லை மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

தமிழகத்தில் கடன் அதிகரித்துள்ளது இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது அவர்கள் 40000 கோடி கடன் பெற்றுள்ளார்கள். முதல் 36,000 கோடி வருவாய்க்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி இருக்கும் போது புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன. நிதிநிலை சரி செய்த பிறகு புதிய தலைமை செயலகம் கட்டலாம். தலைமைச் செயலகம் மாற்றுவதில் மாற்று கருத்து இல்லை. மேலும் அந்த கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் போது மீனவர்களுக்கு பாதிப்பில்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத நல்ல இடத்தை தேர்வு செய்து தலைமைச் செயலகம் கட்டினால் பரவாயில்லை. மீனவர்கள் வசிக்கும் பகுதி, கடலோரப் பகுதி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதி, குடியிருப்பு பகுதி இருக்கும் இடத்தில் இப்படி நெருக்கடியான இடத்தில் தலைமை செயலகம் கட்டுவது எந்த விதத்தில் சரியான இந்த அரசு உணர்ந்து மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தென்காசி மாவட்டத்தில் வயதான பஞ்சு வியாபாரியை காரில் கடத்தி அவர் அணிந்திருந்த சங்கிலியை பறித்துவிட்டு அவர் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். சட்ட ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகும் கொள்ளை, கொலை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெற்று உள்ளது. முன்பு கொடுத்ததை வாங்கினார்கள் இப்போது டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள்.

இந்த ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணங்களை கைப்பற்றியதாக தகவல் வருகிறது. அப்படி என்றால் ஊழல் நடைபெறுகிறது என்றுதானே அர்த்தம்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாலே மாதத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். முதலில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணி கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால் தற்போது தமிழக சிறுகுறு விவசாயி பெற்றுள்ள கடனை ஒரு லட்சத்தில் 75 ஆயிரம் தள்ளுபடி என்று சொல்கிறார். இதனால் விவசாய மக்கள் தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதிப்படி நடைபெற வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர். செவிலியர், மருத்துவர், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் இவ்வளவு போராட்டங்கள் நடைபெறுகிறது.

ஆட்சி பொறுப்பு ஏற்று நான்கு மாதத்தில் உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. 25 சதவீதம் வரை அரிசி, பருப்பு, எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளது. நடுத்தர மக்கள் இடைத்தேர்தல் மிகவும் பாதிக்கின்றனர். அதை சரி செய்ய இந்த அரசு முன்வரவில்லை. மாறாக ரீல்ஸ் அரசாக உள்ளது.

கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.

எங்க வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி பிரயோஜனம் இல்லை. டிவிகே வினர் வீட்டில் நடக்க வேண்டும்.

இரண்டு தொகுதியிலும் இடைத்தேர்தலில் நாங்களும் திமுகவும் போட்டி இருக்கிறோம். அப்படி இருக்கும்போது எப்படி கள்ள உறவு என்று சொல்ல முடியும். அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டியது என தெரியவில்லை. கட்சி தொடங்கி3 ஆண்டுகள் தான் ஆகிறது அதனால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சர்க்காரியா கமிஷன் குறித்து பேசுகிறார்கள் அப்போது முதல்வரும் பிறக்கவில்லை அமைச்சரும், பிறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இப்போது அதை குறித்து எதற்கு பேச வேண்டும். நேரத்தை வீணாக கழிக்கிறார்களே தவிர ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை.

தந்தை பெரியார் என்ன கருத்துக்களை சொன்னார்களோ அதில் மக்கள் ஏற்றுக் கொண்ட கருத்துக்களை அதிமுக செயல் படுத்துகிறது.

அதிமுக ஆட்சி கால கட்டத்தில் நடைபெற்ற திட்டத்திற்கு வெற்றி என பெயர், அவர்கள் எது செய்தாலும் அதில் வெற்றியை சேர்த்துக் கொள்கிறார்கள்.

சபாநாயகர் நடுநிலையாக இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். நேரலையில் மக்கள் பார்க்கிறார்கள் அவர்களுக்கே தெரியும்.

ஒரு யூனிட் 30 ரூபாய் விலை கொடுத்து வாங்குவதாக பத்திரிக்கையை செய்து வருகிறது. இவர்கள் நிர்வாக திறமையற்ற அரசு. அனுபவம் இல்லாத அரசு என்பதால் இந்த மின் வெட்டு ஏற்படுகிறது. அதிகாரிகளை முன்கூட்டியே அழைத்த பேசி தேவைகளுக்கு ஏற்றவாறு மின் கொள்முதல் செய்திருந்தால் தடையில்லா மின்சாரம் வழங்கி இருக்கலாம். அதிமுக ஆட்சியின்போது கடுமையான மின்வெட்டு இருந்தது அதை மூன்று ஆண்டுகளில் சரி செய்து மின்மிகை இல்லாத மாநிலமாக மாற்றினோம். 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கினோம்.

தென்காசி மாவட்டத்தில் மெழுகுவர்த்தி, தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு விவசாயிகள் கடுமையான போராட்டம் நடத்துகிறார்கள்.

இரண்டு இடைத்தேர்தலும் திணிக்கப்பட்ட தேர்தல் என்று தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வர துணை நின்ற கட்சிகளே சொல்கிறது. குதிரை பேரம் மூலமாக விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து. மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள்.

மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செய்திருப்பது கண்டிக்கத்தக்கது இந்த தேர்தல் மூலமாக நாட்டு மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு பாடத்தை வழங்குவார்கள் என கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam