Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா, 17 செப்டம்பர் (ஹி.ச.)
பாரத ராஷ்ட்ர சமிதி தலைவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வலியுறுத்தி ‘தண்டயாத்திரை’ பிரச்சாரத்தை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பண்டி சஞ்சய்,
பிஆர்எஸ் தலைவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானாவில் 60 சதவீத மக்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,தெலங்கானாவில் 25 லட்சம் குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு கூட சிறு நிலம் இல்லை.
சில பிஆர்எஸ் எம்எல்ஏக்களின் நில பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்தவே ஒரு மணி நேரம் ஆனது என்றால், மீதமுள்ள 90 எம்எல்ஏக்களின் நில பரிவர்த்தனைகள் குறித்து விவாதிக்க சட்டசபைக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும்? இதை வெளிப்படுத்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு 1,000 நாட்கள் ஏன் ஆனது? பிஆர்எஸ் உடனான செட்டிங் தோல்வியடைந்ததால் தான் இப்போது இந்த செட்-அப்பா? உங்கள் விசாரணைக் குழுக்கள் ‘எஸ்ஐடி என்றால் உட்கார், ஸ்டாண்ட் என்றால் நில்’ என்பது போல் செயல்படுகின்றன.
மற்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிஆர்எஸ் தலைவர்களுக்கு திறந்த அழைப்பு விடுக்க முதலமைச்சர் சட்டசபையை பயன்படுத்துகிறாரா?” என்றும் பண்டி சஞ்சய் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்சார கொள்முதல், ஃபார்முலா இ, காளேஸ்வரம் மற்றும் செம்மறி ஆடு ஊழல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுக்களின் நிலை என்ன? விசாரணைக்கு ஏன் மேலும் 30 நாட்கள் அவகாசம்? கலெக்டர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்தால், 24 மணி நேரத்தில் அவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். கேசிஆரின் பண்ணை வீட்டில் உள்ள அரசு நிலத்தை கண்டுபிடிக்க 33 மாதங்கள் ஆனதா? என்று அவர் சாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானாவை வளர்ச்சியடையச் செய்ய விரும்புவதாகவும், புல்லட் ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்ட பண்டி சஞ்சய், புல்லட் ரயில் போன்ற திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் கூட முன்னாள் அமைச்சர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார்.
நில உரிமை தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்ததைத் தொடர்ந்து பண்டி சஞ்சயின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b