முதலமைச்சரின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம் - டி.ஆர்.பி. ராஜா
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) முதலமைச்சர் இன்று நாடு திரும்பியதும், நிச்சயம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது லண்டன் பயணத்தின் முழு விவரங்களையும் தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக விளக்குவார் என்று நம்புகிறோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.
TRB Raja


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

முதலமைச்சர் இன்று நாடு திரும்பியதும், நிச்சயம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது லண்டன் பயணத்தின் முழு விவரங்களையும் தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக விளக்குவார் என்று நம்புகிறோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,

₹15,300 கோடி முதலீடு என்று அறிவிக்கப்பட்டதில், புதிதாக இந்தப் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு?

ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கம் எவ்வளவு?

முந்தைய திமுக ஆட்சியிலேயே பேச்சுவார்த்தை தொடங்கி, Guidance Tamil Nadu மூலம் தொடர்ந்து பணிகள் நடைபெற்ற திட்டங்கள் எவை?

₹3,000 கோடி மதிப்பிலான, பெயர் வெளியிடப்படாத நிறுவனத்தின் Letter of Intent, உறுதி செய்யப்பட்ட முதலீடாகக் கணக்கிடப்பட்டுள்ளதா?

ஒவ்வொரு நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கியது? முதலீடு எப்போது, எங்கு செயல்பாட்டுக்கு வரும்? அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எப்போது உருவாகும்?

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களின்போது, புறப்படுவதற்கு முன்பும், நாடு திரும்பிய பிறகும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பயணத்தின் நோக்கம், ஈர்க்கப்பட்ட முதலீடுகள், MoU-க்கள், வேலைவாய்ப்புகள், அவற்றின் செயலாக்க நிலை என மக்களுக்கு விளக்கமளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

எனவே, முதலமைச்சரின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN