தாம்பரம் அருகே ஓலா மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை தாம்பரம் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் குமார் (24). இவர் இன்று காலை வீடு வீடாக செய்தித்தாள் விநியோகம் செய்வதற்காக தனது ஓலா மின்சார இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஆலப்பாக்கம் அருகே சென்ற
Ol


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை தாம்பரம் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் குமார் (24). இவர் இன்று காலை வீடு வீடாக செய்தித்தாள் விநியோகம் செய்வதற்காக தனது ஓலா மின்சார இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

ஆலப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வின் குமார் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். அவர் வாகனத்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில், இருசக்கர வாகனம் முழுவதுமாக தீயில் கருகி சேதமடைந்தது. வாகனத்தை ஓட்டி வந்த அஸ்வின் குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / P YUVARAJ