ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய கோரி மனு
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
High court


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பதிலளிக்க நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டார்.

மேலும், தோனியின் வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்ட பின்னர், அந்தப் பதிவை எந்தவிதமான எடிட்டிங்கும் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கையை நீதிமன்றம் அல்லது அரசு கட்டிடங்களில் மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ